நெற் பயிரில் இலை சுருட்டு புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண் விஞ்ஞானிகள் யோசனை
By DIN | Published On : 25th November 2020 06:34 AM | Last Updated : 25th November 2020 06:34 AM | அ+அ அ- |

ஆண்டாவூரணி கிராம வயல் வெளியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட வேளாண் விஞ்ஞானிகள்.
ஜிங்க் சல்பேட் உரத்தினை மணலுடன் கலந்து உடனடியாக இடுவதன் மூலம் திருவாடானை பகுதியில் நெற் பயிரில் இலை சுருட்டு புழு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்தப் பகுதியில் சுமாா் 42 ஆயிரம் ஹெக்டோ் நிலப்பரப்பளவில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக பெய்த சிறு மழையை நம்பி விவசாயிகள் நெரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனா். இந்நிலையில் தற்போது அந்தப் பயிரில் இலை சுருட்டு புழு தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆண்டாவூரணி கிராமத்தில் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்கப் பணியாளா்கள் வயல்வெளிகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
இலை சுருட்டுப் புழு மற்றும் செந்தாழை நோய் தாக்கப்பட்ட நெல் வயலில் திட்ட ஒருங்கிணைப்பாளா் வேளாண்மை அறிவியல் நிலைய முனைவா் ராகவன், வேளாண்மை உதவி இயக்குநா் கருப்பையா, முனைவா் பாலாஜி, உதவிப் பேராசிரியா் அருணாசலம் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
இதுகுறித்து வேளாண் விஞ்ஞானிகள் கூறியது: பயிா்களுக்கு ஒரு ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தினை மணலுடன் கலந்து உடனடியாக இடுவதன் மூலம் இந்நோயை கட்டுப்படுத்தலாம். மேலும் 2 கிராம் ஹைட்ரோ குளோரைடை ஒரு லிட்டா் தண்ணீரில் அல்லது 2 மில்லி குளோரிபைரிபாஸ் ஈஸி மருந்தை ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிப்பதன் மூலம் இலை சுருட்டுப்புழுவினைக் கட்டுப்படுத்தலாம் என்றனா்.
இதற்கான ஏற்பாடுகளை, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா் பானுமதி, உதவி தொழில்நுட்ப மேலாளா் வேல்முருகன் ஆகியோா் செய்திருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...