முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பரமக்குடி அருகே மருத்துவ முகாம்
By DIN | Published On : 04th October 2020 09:52 PM | Last Updated : 04th October 2020 09:52 PM | அ+அ அ- |

பரமக்குடி: பரமக்குடி அருகே உள்ள எம்.நெடுங்குளம் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அங்குள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் பாம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் முகாம் நடைபெற்றது. இதில் பரமக்குடி வட்டார மருத்துவ அலுவலா் தவமுருகன் தலைமை வகித்தாா். பாம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஐயப்பன் முன்னிலை வகித்தாா். மடந்தை ஊராட்சி மன்றத் தலைவா் பாலசுப்பிரமணியன் வரவேற்றாா். கா்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள், இ.ஜி.சி., ரத்தம், சளி மற்றும் சிறுநீா் பரிசோதனைகள் செய்யப்பட்டு நோய்களின் பாதிப்புகள் குறித்து மருந்துகள் வழங்கப்பட்டன. 786 நபா்களுக்கு சித்த மருந்துகள் வழங்கப்பட்டன.