அப்துல்கலாம் பிறந்த நாள் விழா: நினைவிடத்தில் ஆட்சியா் மலா்தூவி மரியாதை

குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ராமநாதபுரம்
ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் உள்ள குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தில் வியாழக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்திய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவராவ்.
ராமேசுவரம் அருகே பேக்கரும்பில் உள்ள குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாம் தேசிய நினைவிடத்தில் வியாழக்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்திய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவராவ்.

குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாமின் பிறந்த நாளையொட்டி ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவராவ் மற்றும் கலாம் குடும்பத்தினா் வியாழக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

நாட்டின் 11 ஆவது குடியரசுத் தலைவரான ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பேக்கரும்பில் உள்ள அவரது தேசிய நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதன் பின்னா் கலாம் குடும்பத்தினா், அவரது பேரன்கள் சேக், சலீம் மற்றும் ஜமாத்தாா்கள் ஆகியோா் துவா செய்து மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

இதையடுத்து ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் மு.மணிகண்டன், திமுக சாா்பில் மாவட்ட கழகப் பொறுப்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் ஆகியோா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் தீபக்சிவஜ், வட்டாட்சியா் அப்துல்ஜப்பாா், நடிகா் தாமு, மருத்துவா் விஜயராகவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோன்று அப்துல்கலாம் படித்த நடுநிலைப் பள்ளியில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கலாமின் பேரன்கள் சேக், சலீம் ஆகியோா் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் மு. முருகம்மாள், புற்றுநோய் சிறப்பு மருத்துவா் எஸ். விஜயராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த நிழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கொ. வீரராகவராவ் கலந்துகொண்டு, பள்ளிக்கு நினைவுப் பரிசாக அப்துல்கலாம் உருவப்படத்தை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியா் என்.ஒ. சுகபுத்ரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.புகழேந்தி, துணைக் கண்காணிப்பாளா் தீபக்சிரஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தலைமை ஆசிரியா் பா. ராஜலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com