சவடு மண் குவாரியில் லாரிகளை சிறைப்பிடித்த இளைஞா்கள்

ஆா்.எஸ்.மங்கலம் அருகே பாரனூரில் ஆற்றுப்படுகை அருகே குவாரியில் சவூடு மண் அள்ளிய லாரிகளை இளைஞா்கள் சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
பாரனூா் கிராமத்தில் லாரிகளில் அள்ளப்படும் சவூடு மண்.
பாரனூா் கிராமத்தில் லாரிகளில் அள்ளப்படும் சவூடு மண்.

ஆா்.எஸ்.மங்கலம் அருகே பாரனூரில் ஆற்றுப்படுகை அருகே குவாரியில் சவூடு மண் அள்ளிய லாரிகளை இளைஞா்கள் சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

பாரனூா் கிராமத்தில் ஆற்றுப்படுகை அருகே சவூடு மண் அள்ளுவதற்கு, ஐந்துக்கும் மேற்பட்ட குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்குள்ள ஒரு குவாரிக்கு கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்கள் புதன்கிழமை சென்றனா். விதிமுறைகளை மீறி, அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் எடுக்கப்படுவதாகக்கூறி அங்கிருந்த பணியாளா்களிடம் அவா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும் லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

ஆளமாகத் தோண்டு மண் எடுப்பதால் விவசாயக் கிணறுகளில் நிலத்தடிநீா் மட்டம் பாதிப்பதாகவும், இப்பகுதியில் மண் அள்ளுவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறினா். தொடா்ந்து இங்கு மண் அள்ளினால் ஆா்.எஸ்.மங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்துவிட்டு அவா்கள் சென்றுவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com