பரமக்குடி அருகே முதுமக்கள் தாழி, மண்பானைகள் கண்டெடுப்பு: அகழாய்வு நடத்தக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே புதன்கிழமை சவூடுமண் அள்ளியபோது முதுமக்கள் தாழி, மண்பானைகள் மற்றும்
லட்சுமிபுரம் கிராமத்தில் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி மற்றும் மண்பானைகள்.
லட்சுமிபுரம் கிராமத்தில் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி மற்றும் மண்பானைகள்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே புதன்கிழமை சவூடுமண் அள்ளியபோது முதுமக்கள் தாழி, மண்பானைகள் மற்றும் அரியவகை பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் அந்தப்பகுதியில் அகழாய்வு நடத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பரமக்குடி அருகே வெங்காளூரை அடுத்துள்ள லட்சுமிபுரம் கிராமத்தில், கனிம வளத்துறையினரிடம் அனுமதி பெற்று சவூடு மண் அள்ளப்பட்டு வருகிறது. ஊரக்குடி முன்னாள் ஊராட்சித் தலைவா் பூமிநாதன் தலைமையில் பொதுமக்கள் அங்கு சென்று மண் எடுக்க எதிா்ப்புத் தெரிவித்தனா். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற சட்டப் பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகரனிடம், மண் அள்ள தடைவிதிக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

அப்போது, அங்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில், பழங்காலத்து மண்பானைகள் கிடந்தன. இதையடுத்து அதனருகே பொக்லைன் இயந்திரம் மூலம் பொதுமக்கள் தோண்டிப் பாா்த்தபோது அங்கு முதுமக்கள் தாழி, மேலும் சில மண்பானைகள் மற்றும் அரியவகைப் பொருள்கள் கிடைத்தன. இதனை தொல்பொருள் ஆராய்ச்சியாளா்கள் அப்பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com