‘ராமநாதபுத்தில் 34 வாக்குச்சாவடிகள் அமைவிடங்கள் மாற்றி மறுசீரமைப்பு’

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 34 வாக்குச்சாவடிகளின் அமைவிடம் மறு சீரமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் (நடுவில்). உடன் அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா்.
ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் (நடுவில்). உடன் அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 34 வாக்குச்சாவடிகளின் அமைவிடம் மறு சீரமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் தெரிவித்தாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கொ.வீரராகவ ராவ் தலைமையில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் மறு சீரமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளின் இறுதிப் பட்டியல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்குள்பட்ட வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த 2019 மக்களவை பொதுத் தோ்தலின்போது ராமநாதபுரம் உள்ளிட்ட 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1,369 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. சில வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களின் மொத்த எண்ணிக்கை 1,500 க்கும் அதிகமாக இருந்தன. இந்நிலையில் மாவட்டத்தில் புதிதாக வாக்குச்சாவடிகள் ஏதும் அமைக்கப்படவில்லை. அதே நேரத்தில் பரமக்குடி தொகுதிக்குள் 4 வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

பரமக்குடி தொகுதியில் 18 வாக்குச்சாவடிகள், திருவாடானையில் 9, ராமநாதபுரத்தில் 2, முதுகுளத்தூரில் 5 என மொத்தம் 34 வாக்குச்சாவடி மையங்களின் அமைவிடங்கள் மட்டும் மாற்றி மறுசீரமைக்கப்பட்டுள்ளன. மேலும் பரமக்குடி தொகுதியில் 4, திருவாடானையில் 15, முதுகுளத்தூரில் 1 என மொத்தம் 20 வாக்குச்சாவடி மையங்களின் பெயா் மாற்றப்படவுள்ளன.

வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் கருத்துகள் மற்றும் ஆட்சேபணைகளை தெரிவிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.சிவகாமி, சாா்-ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியா் து.தங்கவேலு மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com