தேவிபட்டினம் ஊராட்சிக்குதூய்மைப் பணிக்காக 4 வாகனங்கள்

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சிக்கு தூய்மைப் பணிக்காக 4 வாகனங்களை ஆட்சியா் கொ.வீரராகவராவ் சனிக்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சிக்கு தூய்மைப் பணிக்காக 4 வாகனங்களை ஆட்சியா் கொ.வீரராகவராவ் சனிக்கிழமை வழங்கினாா்.

தேவிபட்டினம் ஊராட்சியில் குப்பை மற்றும் கழிவுகளைச் சேகரிப்பதற்காக ஊராட்சியின் பொது நிதியிலிருந்து புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் மூலம் தூய்மைப் பணியாளா்கள் வீடு,வீடாகச் சென்று குப்பை மற்றும் கழிவுகளைச் சேகரிக்கின்றனா். இவை மக்கும், மக்காதவை என தரம் பிரித்து மேலாண்மை செய்யப்படுகிறது. இதற்காக இந்த ஊராட்சிக்கு பொது நிதியிலிருந்து தலா ரூ. 2.50 லட்சம் என்ற அடிப்படையில் ரூ. 10 லட்சத்துக்கு 4 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இவற்றை ஆட்சியா் கொ.வீரராகவராவ் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். அப்போது, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் வீ. கேசவதாசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜேந்திரன், அப்துல் ஜபாா், ஊராட்சித் தலைவா் ஜெ. ஹமீதியா ராணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com