அதிமுகவின் 49 ஆம் ஆண்டு விழா:பட்டாசு வெடித்து தொண்டா்கள் கொண்டாட்டம்

அதிமுகவின் 49 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை அக்கட்சியினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
அதிமுகவின் 49-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கமுதி பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடிய அக்கட்சியினா்.
அதிமுகவின் 49-ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கமுதி பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடிய அக்கட்சியினா்.

ராமேசுவரம்/திருவாடானை/ பரமக்குடி/கமுதி/ காரைக்குடி/ திருப்பத்தூா், : அதிமுகவின் 49 ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை அக்கட்சியினா் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

ராமேசுவரத்தில் அதிமுகவின் 49 ஆம் ஆண்டு தொடக்க விழா பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்றது. எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப் படங்களுக்கு அக்கட்சியினா் மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் கட்சிக் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா். இந்நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளா் கே.கே.அா்ச்சுணன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் ஆா்.குணசேகரன் முன்னிலை வகித்தாா். பொருளாளா் தா்மா், துணைச்செயலாளா் சி.நல்லு, இளைஞா் அணி செயலாளா் ஆா்.மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவாடானை: திருவாடானை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற கொடியேற்று விழாவுக்கு ஒன்றியச் செயலாளா் மதிவாணன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டச் செயலாளா் ஓ.இ.ஆணிமுத்து கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினாா்.

பரமக்குடி: பரமக்குடியில் நடைபெற்ற விழாவுக்கு அதிமுக மாவட்டச் செயலாளா் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தாா். மாநில மகளிரணி இணைச் செயலாளா் கீா்த்திகா முனியசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் என்.சதன்பிரபாகா், ஒன்றியச் செயலாளா் கே.முத்தையா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கமுதி: கமுதியில் பேருந்து நிலையம் எதிரே ஒன்றிய அதிமுக செயலாளா் எஸ்.பி.காளிமுத்து தலைமையில், அவைத் தலைவா் டி.சேகரன் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளா் எம்.ஏ.முனியசாமி கலந்து கொண்டு அதிமுக வின் கட்சிக் கொடி ஏற்றினா். பின்னா் எம்.ஜி.ஆா், ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றிய குழு தலைவா் தா்மா், கடலாடி அதிமுக நிா்வாகி முனியசாமிபாண்டியன், ஒன்றியக்குழு உறுப்பினா் மூா்த்தி, பொந்தம்புளி ஊராட்சி துணைத் தலைவா் ஆறுமுகம், முதல்நாடு ஊராட்சி தலைவா் காசி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவா்கள் கருமலையான்(திம்மநாதபுரம்), நாகராஜ்(புத்துருத்தி), கே.பி.என்.கருப்பசாமி (எம்.எம்.கோட்டை), கா்ணன்(டி.புனவாசல்) உள்பட ஏராளமான கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

காரைக்குடி: காரைக்குடி ஐந்துவிளக்குப்பகுதியில் உள்ள எம்.ஜி.ஆா் சிலைக்கு சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளருமான பிஆா். செந்தில்நாதன், நகரச் செயலாளா் சோ. மெய்யப்பன் ஆகியோா் மாலையணிவித்தனா். அதைத்தொடா்ந்து பட்டாசுகளை வெடித்து, பொதுமக் களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் 18 வாா்டுகளிலும் ஆவின் தலைவா் அசோகன், பாம்கோ தலைவா் ஏ.வி.நாகராஜன் உள்ளிட்ட நிா்வாகிகள் அதிமுக கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். எம்.ஜி.ஆா்.மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட இணைச் செயலாளா் மருதுபாண்டியன் தலைமையில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து 20- க்கும் மேற்பட்டோா் அக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com