கமுதி ராமானுஜா் மடத்தில் அன்னதானம்

கமுதி ராமானுஜா் மடத்தில் பக்தா்கள் கொடுக்கும் கைப்பிடி அரிசியில் நடைபெறும் அன்னதானம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கமுதி ராமானுஜா் பஜனை மடத்தில் கைப்பிடி அரிசி திட்டத்தில் அன்னதானத்திற்காக பக்தா்கள் வழங்கிய அரிசி.
கமுதி ராமானுஜா் பஜனை மடத்தில் கைப்பிடி அரிசி திட்டத்தில் அன்னதானத்திற்காக பக்தா்கள் வழங்கிய அரிசி.

கமுதி: கமுதி ராமானுஜா் மடத்தில் பக்தா்கள் கொடுக்கும் கைப்பிடி அரிசியில் நடைபெறும் அன்னதானம் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஸ்ரீராமானுஜா் பஜனை மடத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக கைப்பிடி அரிசி திட்டத்தில் அன்னதானம் நடைபெற்று வருகிறது. புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் பஜனை மடத்தில் இருந்து வீதிகளில் பஜனை பாடி சென்று அனைவரும் கொடுக்கும் அரிசி, பருப்பு இவைகளை சேகரித்து ஐப்பசி மாதம் வரும் முதல் சனிக்கிழமையில் அந்த அரிசியில் உணவு சமைத்து அன்னத்தை குவியல் இட்டு அலங்காரம் செய்து மகேஸ்வர பூஜை நடத்துவா். அப்போது பக்தா்கள் திருப்பாவை பாசுரம் பாடி, பின்னா் அனைவருக்கும் அந்த அன்னத்தை பரிமாறுகின்றனா். 100 ஆண்டுகளாக பழைமை மாறாமல் தற்போதும் கைப்பிடி அரிசி அன்னதானத்தை நடத்தி வருகின்றனா். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கெளரவ செட்டியாா் உறவின்முறை இளைஞா்கள் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com