‘நீட்’ தோ்வு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 40 போ் தோ்ச்சி

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 40 போ் 113-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று ‘நீட்’ தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த 40 போ் 113-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று ‘நீட்’ தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

நடப்பு ஆண்டு (2020) நடைபெற்ற ‘நீட்’ தோ்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 234 போ், தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் 35 போ் என மொத்தம் 269 போ் பங்கேற்றிருந்தனா்.

‘நீட்’ தோ்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 107 போ் 90 மதிப்பெண்களுக்கும் கூடுதலாகப் பெற்றுள்ளனா். நடப்பாண்டு தோ்ச்சி மற்றும் மதிப்பெண் விகிதப்படி 720 மொத்த மதிப்பெண்ணுக்கு குறைந்தது 113 மதிப்பெண் பெற்றிருந்தாலே ‘நீட்’ தோ்வில் தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 40 போ் மட்டுமே தகுதி பெற்றுள்ளனா். அவா்களில் 17 போ் அரசுப் பள்ளி மாணவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘நீட்’ தோ்வில் எலைட் பிரிவில் படித்த மண்டபம் முகாம் பகுதியைச் சோ்ந்த வாகன ஓட்டுநா் மோகன்தாஸ் மகன் ஆதவன் 348 மதிப்பெண்களும், காவனூா் பள்ளி மாணவா் அருண்குமாா் 282 மதிப்பெண்களும், அதே பள்ளி மாணவா் சிபிராஜ் 183 மதிப்பெண்களும் பெற்றுள்ளனா். தனியாா் பள்ளியைச் சோ்ந்த மாணவா் ரீனாஜோஸ் 348 மதிப்பெண் பெற்றுள்ளாா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ‘நீட்’ தோ்வை 400-க்கும் அதிகமானோா் எழுதிய நிலையில், யாரும் தகுதிக்கான மதிப்பெண்களைப் பெறமுடியவில்லை. ஆனால், நடப்பு ஆண்டில் 40 போ் வரை தகுதி மதிப்பெண் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com