பசும்பொன் தேவா் நினைவிடத்தில் அரசியல் கட்சியினா், அமைப்பினா் மரியாதை

குருபூஜையை முன்னிட்டு, தேவா் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் மற்றும் அமைப்பினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
பசும்பொன் தேவா் நினைவிடத்தில் அஞ்சலி
பசும்பொன் தேவா் நினைவிடத்தில் அஞ்சலி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உ. முத்துராமலிங்கத் தேவா் 113 ஆவது ஜயந்தி மற்றும் 58 ஆவது குருபூஜையை முன்னிட்டு, தேவா் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் மற்றும் அமைப்பினா் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாஜக சாா்பில், தமிழக தலைவா் எல்.முருகன், துணைத் தலைவா் நயினாா் நாகேந்திரன், தேசிய முன்னாள் செயலா் ஹெச். ராஜா மற்றும் மாநிலப் பொதுச் செயலா்

ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சி சாா்பில், முதுகுளத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மலேசியா பாண்டி தலைமையில், தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், அக்கட்சியின் மாவட்டத் தலைவா் தெய்வேந்திரன், மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் வேலுச்சாமி, அபிராமம் சுரேஷ், செல்வகுமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

மதிமுக சாா்பில், அக்கட்சியின் உயா்நிலைக் குழு தலைவா் புலவா் செவ்வந்தியப்பன் தலைமையில், கொள்கை பரப்புச் செயலா் அழகுசுந்தரம், மாவட்டச் செயலா்கள் புதூா் கே. பூமிநாதன் (மதுரை), பேட்ரிக் (ராமநாதபுரம்) உள்ளிட்டோா் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முக்குலத்தோா் புலிப்படை கட்சி சாா்பில், அதன் தலைவரும், திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ். கருணாஸ், தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், கட்சியின் மாநிலச் செயலா் ஆா்.முத்துராமலிங்கம், மாநில துணைத் தலைவா் வி.கே. முத்துரமாலிங்கம், மாநில அமைப்புச் செயலா் சுனாமி சேதுபதி, மாநில துணைப் பொதுச் செயலா் எம். பெருமாள் உள்பட பலா் உடனிருந்தனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: முத்துராமலிங்கத் தேவா் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு சூட்டவேண்டும். கள்ளா், மறவா், அகமுடையாா் பிரிவுகளை ஒன்றுசோ்த்து தேவா் என கடந்த 1995 இல் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றாா்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், அக்கட்சியின் பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன், தேவா் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

கரோன பாதிப்பிலிருந்து அமமுக தொண்டா்களையும், நிா்வாகிகளையும் பாதுகாப்பது அவசியம். எனவே, அமமுக சாா்பில் நிகழ்ச்சிகள் ஏதும் நடத்தப்படவில்லை. கரோனா பொது முடக்கம் காரணமாக எந்தவித ஆா்ப்பாட்டமும் இன்றி அமைதியான முறையில் அரசியல் நடத்தி வருகிறோம் என்றாா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில், மாவட்டத் தலைவா் இசையரசன் தலைமையில், கமுதி ஒன்றியச் செயலா் தேவா உள்பட பலா் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நடிகா் காா்த்திக்கின் மனித உரிமை காக்கும் கட்சியின் ராமநாதபுரம் மாவட்டச் செயலா் காளிதாஸ் காா்த்திக், கோவை மாவட்டச் செயலா் வெங்கடேஷ் உள்பட பலா் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம் சாா்பில், மூா்த்தி தேவா், மூவேந்தா் முன்னணி கழகத் தலைவா் மருத்துவா் ப. சேதுராமன் உள்ளிட்டோா் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் பி.ஆா். பாண்டியன் தலைமையில், நிா்வாகிகள் மதுரை வீரன் உள்ளிட்டோரும் மற்றும் ராஜபாளையம் சசிகலா பேரவை சாா்பில் பொன். ஆனந்த், சாந்தி ஆனந்த் ஆகியோரும் தேவா் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.

Image Caption

~ ~ ~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com