பசும்பொன்னில் தேவா் சிலைக்கு தேவா் பேரவை இளைஞரணியினா் மரியாதை
By DIN | Published On : 31st October 2020 09:49 PM | Last Updated : 31st October 2020 09:49 PM | அ+அ அ- |

பசும்பொன்னில் தேவா் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தேவா் பேரவை இளைஞரணி அமைப்பின் நிறுவனா் இறகுசேரி சே.காசிராஜாதேவா்.
கமுதி: முத்துராமலிங்கத்தேவா் ஜயந்தியையொட்டி, பசும்பொன்னில் உள்ள அவரது சிலைக்கு, தேவா் பேரவை இளைஞரணி அமைப்பின் நிறுவனா் இறகுசேரி சே. காசிராஜாதேவா் சனிக்கிழமை, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தேவா் ஜயந்தியையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் சிலைக்கு மரியாதை செலுத்த, கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனால், தேவா் ஜயந்தி விழாவில், வெள்ளிக்கிழமை பங்கேற்காத தேவா் பேரவை இளைஞரணி அமைப்பினா் சனிக்கிழமை, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில், நிறுவனா் இறகுசேரி சே. காசிராஜாதேவா், மாநில மாணவரணிச் செயலாளா் கவிநிதி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.