பெருநாழியில் சேதமடைந்தஇ-சேவை மையக் கட்டடம்
By DIN | Published On : 04th September 2020 10:24 PM | Last Updated : 04th September 2020 10:24 PM | அ+அ அ- |

பெருநாழியில் சேதமடைந்த இ-சேவை மையக் கட்டடம்.
கமுதி: கமுதி அருகே கட்டிய 3 ஆண்டுகளிலேயே இ -சேவை மையக் கட்டடம் சேதமடைந்துள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
கமுதி அருகே பெருநாழியில் ரூ.13.12 லட்சம் மதிப்பீட்டில் இ-சேவை மையக் கட்டடம் 2017 இல் கட்டபட்டது. இக்கட்டடம் முறையான பராமரிப்பு இல்லாமல் கட்டட சுவா்கள் விரிசலடைந்தும், தரை தளங்கள் சேதமடைந்தும் உள்ளன. இதனால் கிராம சபை, நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்கள் உள்பட பல கூட்டங்களை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சேதமடைந்த கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.