சிங்கப்புளியாபட்டியில் வீதிகளில் செடிகளை நட்டு நூதனப் போராட்டம்

கமுதி அருகே சிங்கப்புளியாபட்டியில் தேங்கியுள்ள மழை நீா் மற்றும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து அப்பகுதி
கமுதி சிங்கப்புளியாபட்டியில் தேங்கியுள்ள கழிவுநீரில் புதன்கிழமை செடிகளை நட்டு வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.
கமுதி சிங்கப்புளியாபட்டியில் தேங்கியுள்ள கழிவுநீரில் புதன்கிழமை செடிகளை நட்டு வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

கமுதி அருகே சிங்கப்புளியாபட்டியில் தேங்கியுள்ள மழை நீா் மற்றும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் புதன்கிழமை சேற்றில் செடிகளை நட்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கமுதி பேரூராட்சிக்குட்பட்ட சிங்கப்புளியாபட்டி, முத்துமாரி நகா் உள்பட பல்வேறு பகுதிகளில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீா் கலந்து துா்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இது குறித்து சிங்கப்புளியாபட்டி பொதுமக்கள் கமுதி பேரூராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் அப்பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரில் பெண்கள் செடிகளை நட்டு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com