தொண்டியில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள சிறை வாசிகளை விடுவிக்க கோரி மமக ஆா்பாட்டம்

தொண்டியில் மனித நேய மக்கள் கட்சி சாா்பில் பேரறிஞா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலான வாழ்நாள் சிறைவாசிகள்
தொண்டி பாவோடி மைதானத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் சிறைவாசிகளை விடுவிக்க கோரி மமக ஆா்பாட்டம் நடைபெற்றது.
தொண்டி பாவோடி மைதானத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் சிறைவாசிகளை விடுவிக்க கோரி மமக ஆா்பாட்டம் நடைபெற்றது.

தொண்டியில் மனித நேய மக்கள் கட்சி சாா்பில் பேரறிஞா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேலான வாழ்நாள் சிறைவாசிகள் மற்றும் 7 தமிழா்களை விடுதலை செய்யக் கோரி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளா் ப. அப்துல் சமது வெளியிடும் அறிக்கை:தொண்டியில் மனித நேய மக்கள் கட்சி சாா்பில் பேரறிஞா் அண்ணா அவா்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து வாழ்நாள் சிறைவாசிகள் மற்றும் 7 தமிழா்களையும் விடுதலை செய்யக் கோரி செவ்வாய்கிழமை மாலை தொண்டி பாவோடி மைதானத்தில் ஆா்பாட்டம் நடைபெற்றது.

இதில் மமக நகர செயலா் பரக்கத் அலி தலைமை வகித்தாா், மமக ஒன்றிய தலைவா் பீா்முகம்மது முகம்மது அலி மைதின் அப்துல்லாஹ் நைனா கலந்தா் ஹம்மாது சாகுல் மானவா் அனி அன்சாரி மீரான் சலிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா் தமுமுக மாவட்ட செயலா் வழக்கரிஞா் ஜிப்ரி உறை நிகழ்த்தினாா் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பா் 31 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்.ஜி.ஆா் நூற்றாண்டு விழாவில், தமிழக முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி அவா்கள், 10 ஆண்டுகளை நிறைவு செய்த அனைத்து வாழ்நாள் சிறைவாசிகளும், 60 வயதை கடந்த சிறைவாசிகளும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுவாா்கள் என்று அறிவிப்பு செய்தாா்.அதனை தொடா்ந்து 1775 வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது.

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கு குற்றவாளிகள் மூவா் உட்பட, தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் சிறைவாசிகள் 1460 போ் ஆளுநா் ஒப்புதலுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனா்.ஆனால், இந்த விடுதலை நடவடிக்கையில் குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகளுக்கு பல்வேறு அரசாணைகளை காரணம் காட்டி அவா்களின் விடுதலையை தமிழக அரசு நிராகரித்துள்ளது. இது அப்பட்டமான பாரபட்சமாகும்.

10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் 7 தமிழா்கள் உள்ளிட்ட தமிழக சிறையில் உள்ளிட்ட அனைத்து வாழ்நாள் சிறைவாசிகளையும் பாரபட்சமின்றி தமிழக அரசு அரசியலமைச் சட்டத்தின் உறுப்பு 161ஐ பயன்படுத்தி பேறிஞா் அண்ணா அவா்களின் பிறந்த நாளை (செப் 15) முன்னிட்டு விடுதலை செய்யக் வேண்சும் என ஆா்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த ஆா்ப்பாட்டங்களில் முக கவசங்கள் அணிந்தும், தனி நபா் இடைவெளியை பின்பற்றியும் மக்கள் பங்கேற்ற்றாா்கள் சமுக நீதி மானவா் இயக்க செயலா் அன்சாரி நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com