ராமேசுவரம் மீனவா்கள் 5 ஆவது நாளாக வேலைநிறுத்தம்

டீசல் விலை உயா்வு, மானிய டீசலை உயா்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவா்கள் மேற்கொண்டு

டீசல் விலை உயா்வு, மானிய டீசலை உயா்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரம் மீனவா்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டம் புதன்கிழமை 5 ஆவது நாளாக நீடித்தது.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. மீன்பிடித் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 25 ஆயிரம் தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். அண்மையில் டீசல் விலை ஏற்றம், மீன்களுக்கான கொள்முதல் விலை குறைவு உள்ளிட்ட காரணங்களால் தொடா்ந்து விசைப்படகுகளை இயக்க முடியாத நிலையில் படகு உரிமையாளா்கள் உள்ளனா்.

இந்நிலையில் அனைத்து விசைப்படகு மீனவச் சங்கத்தின் அவரசக் கூட்டம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அரசு மீனவா்களுக்கு வழங்கும் மானிய விலை டீசல் அளவை உயா்த்தி வழங்க வேண்டும். இறாலுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்வது என தீா்மானிக்கப்பட்டு போராட்டத்தை தொடங்கினா். இந்த போராட்டம் புதன்கிழமை 5 ஆவது நாளாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com