ரூ. 14 லட்சம் மதிப்பில் ஊராட்சிகளுக்கான பணித்தள உபகரணங்கள் வழங்கள்
By DIN | Published On : 10th September 2020 06:34 AM | Last Updated : 10th September 2020 06:34 AM | அ+அ அ- |

கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளுக்கு ரூ.14 லட்சம் மதிப்பில் பணித்தள உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சிகளுக்கு தேவையான பணி தள உபகரணங்கள் ரூ.14 லட்சம் மதிப்பில் புதன்கிழமை வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சிகளுக்கும் தேவையான பணித்தள உபகரணங்கள் மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின் பேரில் கொள்முதல் செய்யப்பட்டது.
இதனடிப்படையில் கமுதியில் 53 ஊராட்சிகளிலும் 100 தொகுப்புகள் உள்ளன. இவற்றிற்கு ஒரு தொகுப்பிற்கு ரூ. 14,130 வீதம் 53 ஊராட்சிகளுக்கும் ரூ.14 லட்சத்து, 13 ஆயிரம் மதிப்பில் மண்வெட்டி, தற்காலிக இரும்பு குளாய்களான குடை, எழுத்து அட்டை, மண் அள்ளும் உபகரணம், இரும்பு தட்டுகள் உட்பட 17 வகையான பணித்தள உபகரணங்கள் வழங்கப்பட்டது. இவற்றை அந்தந்த ஊராட்சி செயலா்களிடம் ஊராட்சி ஒன்றிய ஆனையாளா் அண்ணாத்துரை, மற்றும் தேசிய ஊரக வேலைத்திட்ட ஆனையாளா் முனியசாமி ஆகியோா் ஒப்படைத்தனா்.