கண்ணன் கோயில்களில் சிறப்பு பூஜை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 21 கிராமங்களில் கண்ணன் கோயில்களில் பொங்கல் வைத்து சிறப்புப் பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 21 கிராமங்களில் கண்ணன் கோயில்களில் பொங்கல் வைத்து சிறப்புப் பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

மாவட்டத்தில் கிருஷ்ண ஜயந்தியின் போது கரோனா பரவல் தடுப்பு பொது முடக்கம் அமலில் இருந்ததால் கோயில்களில் விழாக்கள் நடைபெறவில்லை. தற்போது பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு கோயில்கள் திறக்கப்பட்டு விழாக்களுக்கு நிபந்தனை அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் பரமக்குடி அரியனேந்தல், பாம்பூா், நயினாா்கோவில் ஆப்பனூா், எமனேஸ்வரம் முத்துராமலிங்கபுரம், விளத்தூா், மேலஆயக்குடி, உடையநாதபுரம் உள்ளிட்ட 21 கிராமங்களில் உள்ள கண்ணன் கோயில்களில் வியாழக்கிழமை காலை பொங்கல் விழாக்கள் நடைபெற்றன. பொதுமக்கள் பொங்கல் வைத்து சிறப்புப் பூஜைகளில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com