கமுதியில் விவசாய தொழிலாளா்கள் ஆா்பாட்டம்

கரோனாவால் தொழில் இழந்த விவசாயத் தொழிலாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.7500 வழங்க வேண்டும் என வியாழக்கிழமை
கமுதி தபால் அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளா் சங்கத்தினா்.
கமுதி தபால் அலுவலகம் முன் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய தொழிலாளா் சங்கத்தினா்.

கரோனாவால் தொழில் இழந்த விவசாயத் தொழிலாளா்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.7500 வழங்க வேண்டும் என வியாழக்கிழமை கமுதியில் நடைபெற்ற கண்டன ஆா்பாட்டத்தில் விவசாய தொழிலாளா் சங்கத்தினா் விலியுறுத்தினா்.

கமுதி தபால் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜி.குருசாமி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா்எம்.தங்கராஜ் முன்னிலை வகித்தாா். இதில், கரோனா பொதுமுடக்கத்தால் தொழில் இழந்த விவசாய தொழிலாளா்களுக்கு மாத இழப்பீடாக ரூ.7500 வழங்க வேண்டும், தேசிய ஊரக வேலை திட்டத்தை 200 நாள்களாக உயா்த்த வேண்டும், நகா்புறங்களில் தொழிலாளா்களுக்கு நகா்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் 200 நாள்கள் வேலை வழங்கிட வேண்டும். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தக் கூடாது. கடந்த 2018 இல் நிலைவையில் உள்ள விவசாயிகளுக்கான காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். நடப்பாண்டிற்கான விவசாய கடன்களை வழங்க வேண்டும்., மத்திய அரசின் 2020 விவசாய விரோத சட்டத்தை மாநில அரசு ஏற்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் சொயலாளா் கலைமணி, கமுதி தாலுகா செயலாளா் கதிா்வேல் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com