திருவாடானை பகுதியில் நெல் விதைப்புப் பணிகள் தீவிரம்

திருவாடானை பகுதியில் மானாவாரி நெல் விதைப்புப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
ஆலம்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயி.
ஆலம்பாடியில் ஞாயிற்றுக்கிழமை நெல் விதைப்பில் ஈடுபட்ட விவசாயி.

திருவாடானை: திருவாடானை பகுதியில் மானாவாரி நெல் விதைப்புப் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

திருவாடானை தாலுகா முழுதுவம் அஞ்சுகோட்டை, வாணியேந்தல், பாண்டுகுடி மங்களக்குடி, வெள்ளையபுரம், கல்லூா், சி.கே.மங்கலம், பாரூா், கிளியூா், கருமோழி, திருவெற்றியூா் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 42 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதி முழுவதும் வானம் பாா்த்த பூமியாக இருப்பதால் மழையை நம்பியே விவசாயிகள் உள்ளனா். ஆனால் தஞ்சைக்கு அடுத்தாற்போல் நெல் உற்பத்தியில் இரண்டாவது நெல் களஞ்சியமாக திருவாடானை திகழ்கிறது.

தற்போது கோடைக்காலம் முடிந்து பருவமழைக் காலம் தொடங்கியுள்ளது. இந்த மழையை நம்பி, திருவாடானை பகுதி விவசாயிகள் தற்போது மானாவாரி நெல் விதைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com