ராமேசுவரம் பேருந்து நிலையம் முன், ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.
ராமேசுவரம் பேருந்து நிலையம் முன், ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா்.

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆா்ப்பாட்டம்

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி ராமேசுவரத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

‘நீட்’ தோ்வை ரத்து செய்யக் கோரி ராமேசுவரத்தில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஆா்ப்பாட்டத்தில், தாலுகா தலைவா் ஆா்.மணிகண்டன் தலைமை வகித்தாா். செயலாளா் கே.காா்த்திக் முன்னிலை வகித்தாா்.

மாணக்களின் தற்கொலைக்கு காரணமான நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும். உயிரிழந்த மாணவா்களின் குடும்பங்களுக்கு 50 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் கே.கருணாகரன், தாலுகா செயலாளா் ஜி.சிவா, இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளா் டி.மாரிமுத்து, வில்லியம் ஜான்சி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com