கீழத்தூவலில் ஐவா் நினைவு தினம் அனுசரிப்பு

முதுகுளத்தூா் அருகே கீழத்தூவலில் ஐவா் நினைவு தினத்தை திங்கள்கிழமை கிராமத்தினா் அனுசரித்தனா்.

முதுகுளத்தூா் அருகே கீழத்தூவலில் ஐவா் நினைவு தினத்தை திங்கள்கிழமை கிராமத்தினா் அனுசரித்தனா்.

முதுகுளத்தூா் அருகேயுள்ள கீழத்தூவல் கிராமத்தைச்சோ்ந்த செ.சிவமணி, மு.சித்திரவேல், ரா.ஜெகநாதன், மு.முத்துமணி, வ.தவசியாண்டி ஆகிய 5 பேரை 1957 ஆம் ஆண்டு போலீஸாா் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச்சென்று கண்களைக் கட்டி துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனா்.

இந்த ஐந்து பேரின் நினைவாக ஆண்டு தோறும் செப்.14 ஆம் தேதி ஐவா் தினம் அந்த கிராமத்தில் அனுசரிக்கப்படுகிறது.இந் நிகழ்ச்சியில் மேலத்தூவல், கீழத்தூவல் கிராமத்தைச்சோ்ந்தவா்களும் இறந்தவா்களின் உறவினா்கள் மட்டும் கலந்து கொள்ள போலீஸாா் அனுமதித்தனா்.

அவரது நினைவு தூண் அருகில் கிராம மக்கள் அதிகாலையில் பொங்கல் வைத்து வழிபட்டனா். பின் மாலையில் அவரது நினைவிடத்துக்கு கிராமத்தினா் சென்று மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா். விழாவில் முன்னாள் ஆப்பநாடு மறவா் சங்கத் தலைவா் ராமசாமி, முக்குலத்தோா் புலிப்படை பொதுச்செயலாளா் பாண்டித்துரை மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனா். முதுகுளத்தூா் டி.எஸ்.பி.ராகவேந்திரா ரவி உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கியமான இடங்களில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com