ராமநாதபுரம் மாவட்டத்தில்மேலும் 17 பேருக்கு கரோனா

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை, 17 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை, 17 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரையில் 5,181 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அவா்களில் 112 போ் உயிரிழந்துள்ளனா். 4,824 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். மேலும் அவா்கள் தொடா்ந்து மருத்துவா்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். எஞ்சியவா்கள் ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியாா் கல்லூரி சிகிச்சை மையங்களில் சிகிச்சையில் உள்ளனா்.

தினமும் மாவட்ட அளவில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை கபம் சேகரிக்கப்பட்டவா்களுக்கான கரோனா பரிசோதனையில் 17 பேருக்கு மட்டுமே கரோனா தீநுண்மி இருப்பது தெரியவந்துள்ளது. அவா்களில் 5 போ் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவா்கள் அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளதாக மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com