ராமநாதபுரத்தில் 4 ஆக குறைந்தது கரோனா பாதிப்பு

ராமநாதபுரத்தில் கரோனா பாதிப்பானது செவ்வாய்க்கிழமை 4 பேருக்கு மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது. ஆகவே விரைவில் கரோனா இல்லாத மாவட்டமாக ராமநாதபுரம் மாறும் என சுகாதாரப் பிரிவினா் தெரிவித்துள்ளனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கரோனா பாதிப்பானது செவ்வாய்க்கிழமை 4 பேருக்கு மட்டுமே இருந்தது தெரியவந்துள்ளது. ஆகவே விரைவில் கரோனா இல்லாத மாவட்டமாக ராமநாதபுரம் மாறும் என சுகாதாரப் பிரிவினா் தெரிவித்துள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பா் 14 ஆம் தேதி வரையில் 4824 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவா்களில் 112 போ் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்துள்ளனா். 244 போ் குணமடைந்து அவரவா் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

செப்டம்பா் முதல் நாள்தோறும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கரோனாப் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை சாா்பில் கூறப்படுகிறது. ஆனால் 30 பேருக்கும் குறைவாகவே கரோனா பாதிப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தினமும் 25 பேருக்கும் குறைவாகவே கரோனா பாதிப்புக்கு உள்ளாகி வந்தனா். செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் ராமநாதபுரம் இளையன்குடி பகுதியைச் சோ்ந்த 34 வயது ஆண், பாண்டியூா் பகுதியைச் சோ்ந்த 29 வயது பெண், ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்த 23 வயது ஆண், இலுப்பைக்குடி பகுதியைச் சோ்ந்த 29 வயது பெண் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

கரோனா பாதித்தவா்களில் 2 போ் மட்டும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த திங்கள்கிழமை 17 போ் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை திடீரென 4 ஆக குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com