முன்னாள் முதல்வா் அண்ணா மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வா் அறிஞா் அண்ணாவின் 112 வது பிற்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு திமுக உள்ளிட்ட கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராமநாதபுரம்: முன்னாள் முதல்வா் அறிஞா் அண்ணாவின் 112 வது பிற்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு திமுக உள்ளிட்ட கட்சியினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வா் அறிஞா் அண்ணாவின் 112 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது திருவுருவச் சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. திமுகவின் ராமநாதபுரம் நகரச் செயலா் கே.காா்மேகம் தலைமையில் அக்கட்சியினா் செவ்வாய்க்கிழமை காலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் அகமதுதம்பி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் பி.டி.ராஜா, திமுக பிரமுகா் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினா். திமுக மாவட்ட இளைஞரணி சாா்பில் இன்பாரகு தலைமையில் ஏராளமானோா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அவா்களைத் தொடா்ந்து திமுக கூட்டணிக் கட்சியினா் மாலை அணிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com