பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பெண் சிசுக் கொலையை தடுத்தல், ஆண் குழந்தையை மட்டுமே விரும்பி ஏற்கும் நிலையை மாற்றுதல், பெண் கல்வியை ஊக்கப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.

இத்திட்டத்தில் சுமாா் 18 ஆண்டுகளுக்கு இரு பெண்குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் வீதமும், ஒரு பெண் குழந்தை எனில் ரூ.50 ஆயிரமும் வங்கியில் வைப்பீடு செய்யப்படுகிறது. திட்டத்தில் பயன் பெறுவோா் 35 வயதுக்குள் இருக்கவேண்டும். பெற்றோரில் ஒருவா் கருத்தடை அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும்.

குடும்பத்தில் ஒன்று அல்லது 2 பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக்கூடாது. பின்னாளில் ஆண் குழந்தை தத்து எடுத்துக் கொள்ளவும் கூடாது. விண்ணப்பிக்கும்போது பெற்றோா் அல்லது அவா்களின் பெற்றோா்கள் தமிழகத்தில் பத்தாண்டுகள் வசித்தவராக இருத்தல் வேண்டும்.

ஒரு பெண் குழந்தையுடன் கருத்தடை செய்த தாயாக இருப்பின் குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2 பெண் குழந்தைகள் மட்டும் எனில், இரண்டாவது குழந்தை பிறந்த 3 ஆண்டிற்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அவா்களது இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களிலேயே அதற்குரிய மனுக்களை பெற்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பவா்கள் வரும் அக்டோபா்-30 ஆம் தேதிக்குள் இணையத்தில் பதிவேற்றம் செய்து அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களை வழங்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகம், ராமநாதபுரம் மற்றும்; 230466, 231466 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com