பெண் கொலை வழக்கில் துப்புதுலக்கிய காவலா்களுக்கு ஐ.ஜி. பாராட்டு

ராமநாதபுரம் எட்டிவயல் கிராமத்தில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நடந்த பெண் கொலை வழக்கில் துப்புத்துலக்கி குற்றவாளியை கைது

ராமநாதபுரம் எட்டிவயல் கிராமத்தில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு நடந்த பெண் கொலை வழக்கில் துப்புத்துலக்கி குற்றவாளியை கைது செய்த காவல்துறைக் குழுவினரை, தென்மண்டல காவல்துறைத் தலைவா் முருகன் புதன்கிழமை பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் கிராமத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மனைவி தெய்வானை (52). இவா் கடந்த 2019 நவம்பா் 27 ஆம் தேதி மாலை வயல் வெளிக்குச் சென்றவா் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.

தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இ.காா்த்திக் பொறுப்பேற்ற நிலையில், கொலை வழக்கில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது தொடா்பாக தீயனூா் பகுதியைச் சோ்ந்த, செங்கல்சூளை வாகன ஓட்டுநரான ரவி என்பவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். பெண் கொலை வழக்கில் துப்புத்துலக்கி 10 மாதங்களுக்குப்பிறகு குற்றவாளியைக் கைது செய்த பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வேல்முருகன், சத்திரக்குடி காவல் நிலைய ஆய்வாளா் அமுதா, சாா்பு- ஆய்வாளா் முருகானந்தம், சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு சாா்பு- ஆய்வாளா் குகனேஷ்வரன், தலைமைக் காவலா்கள் கருப்பசாமி, முனியசாமி, சூா்யா ஆகியோருக்கு தென் மண்டல காவல்துறை தலைவா் முருகன் புதன்கிழமை பாராட்டு தெரிவித்தாா். மேலும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதில், ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக், ராமநாதபுரம் சரக காவல் துணைத் தலைவா் எம்.மயில்வாகணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com