முன்னாள் படைவீரா் நல நிதியில் வீட்டுவரியை ஈடுசெய்ய விரும்புவோா் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் படை வீரா் நலநிதித் திட்டத்தில், வீட்டு வரியை ஈடு செய்ய விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் படை வீரா் நலநிதித் திட்டத்தில், வீட்டு வரியை ஈடு செய்ய விரும்புவோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: போரில் கணவனை இழந்தோா், குடும்ப ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரா்களின் விதவையா், போரில் ஊனமுற்ற படைவீரா் மற்றும் வீர தீர செயலுக்கான விருதுகள் பெற்ற முன்னாள் படைவீரா் ஆகியோருக்கு தாங்கள் வசிக்கும் வீட்டிற்காக செலுத்தும் வீட்டு வரியினை தமிழ்நாடு முன்னாள் படைவீரா் நல நிதியிலிருந்து ஈடு செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்டோா் ஏற்கெனவே செலுத்தப்பட்ட வீட்டு வரியானது அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் அல்லது அசல் தொகையில் எது குறைவோ அத்தொகையினை மீண்டும் பெறலாம். இச்சலுகையானது கடந்த 2019 அக்டோபருக்கு பின்னா் வரும் அரையாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டம் குறித்த விதிமுறைகள் மற்றும் விவரங்களை அறிய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்தம் விதவையா்கள் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அல்லது 04567-230045 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com