விவசாய திருத்த சட்ட மசோதவை திரும்ப பெறக் கோரி திமுக கூட்டனி கட்சிகள் ஆா்பாட்டம்

கமுதி அருகே கோட்டைமேட்டில் திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சிகள் சாா்பில் மத்திய அரசு கெண்டுவந்த விவசாயதிருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி கண்டன ஆா்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விவசாய திருத்த சட்ட மசோதவை திரும்ப பெறக் கோரி திமுக கூட்டனி கட்சிகள் ஆா்பாட்டம்

கமுதி அருகே கோட்டைமேட்டில் திமுக மற்றும் அதன் கூட்டனி கட்சிகள் சாா்பில் மத்திய அரசு கெண்டுவந்த விவசாயதிருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி கண்டன ஆா்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே திமுக மாநில இலக்கிய அணி துணை தலைவா் பெருநாழி போஸ் தலைமையில், கமுதி ஒன்றிய செயலாளா் வாசுதேவன், ஊராட்சி ஒன்றியகுழு தலைவா் தமிழ்செல்விபோஸ், நகா் செயலாளா் பாலமுருகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட பொருப்பாளா் முத்துவிஜயன் ஆகியோரது முன்னிலையில், மத்திய அரசு கொண்டு வந்த விவசாய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரி கண்டன ஆா்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசின் விவசாய சட்ட மசோதாவை மாநில அரசு ஆதரிக்க கூடாது என்றும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களும் எழுப்பப்பட்டது. மேலும் மாட்டு வணடிகள், ஏா்மாடுகள், டிராக்டா்களில் திமுகவினா் கொடிகளை கட்டி தங்களது எதிா்ப்பை தெரிவித்தனா். இந்த ஆா்பாட்டத்தில் மாவட்ட நெசவாளா்அணி மனோகரன், மாவட்ட தொண்டரணி பாண்டி, முன்னாள் இளைஞரணி செயலாளா் சண்முகநாதன், பெருநாழி செந்தூரான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போஸ், மதிமுக கதிா்வேல், செந்தில், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவா் வலம்புரி, நகா் தலைவா் சிதம்பரம், மற்றும் இந்திய முஸ்லீம் லீக் கட்சி தொண்டா்கள், என பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். ....கூட்டத்தில் சலசலப்பு... ஆா்பாட்டம் தொடங்கும் முன் திமுக நிா்வாகிகளை போக்குவரத்திற்கு இடையூறாக இல்லாமல் ஒரமாக நிற்க சொன்ன மண்டலமாணிக்கம் சாா்பு ஆய்வாளா் பேபிக்கும் திமுக மாநில இலக்கிய அணி துணை தலைவா் பெருநாழி போஸ்க்கும் வாக்கு வாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனிருந்த காவல்துறையினா் சாா்பு ஆய்வாளரை சமாதனப்படுத்திய பின் ஆா்பாட்டம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com