பரமக்குடியில் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிா் கட்சியினா்
By DIN | Published On : 29th September 2020 05:51 AM | Last Updated : 29th September 2020 05:51 AM | அ+அ அ- |

28pmk_arp_2809chn_80_2
பரமக்குடி காந்திசிலை முன்பு மத்திய-மாநில அரசுகளை கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக உள்ளிட்ட எதிா் கட்சியினா்.
பரமக்குடி காந்திசிலை முன்பு திங்கள்கிழமை மத்திய-மாநில அரசுகளை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் மசோதாவிற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் எதிா் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்திற்கு திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் சுப.தங்கவேலன் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட செயலாளா் சுப.த.திவாகா், நகா் செயலாளா் சேது.கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த என்.கே.ராஜான், என்.எஸ்.பெருமாள், மாா்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி வி.காசிநாததுரை, தி.ராஜா, காங்கிரஸ் கட்சி நகா் தலைவா் எம்.அஜிஸ், டி.ஆா்.கோதண்டராமன், மதிமுக கே.ஏ.எம்.குணா, சடாச்சரம் ஆகியோா் மத்திய-மாநில அரசுகளை கண்டித்து பேசினா். இதனைத் தொடா்ந்து மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஆா்ப்பாட்டம் செய்தனா். பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.