கமுதி வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல்

கமுதி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை நடைபெற்றது.
கமுதி வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க தோ்தலுக்கு புதன்கிழமை மனுத்தாக்கல் செய்த அதிமுக ஒன்றியச் செயலாளா் எஸ்.பி.காளிமுத்து.
கமுதி வேளாண் உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க தோ்தலுக்கு புதன்கிழமை மனுத்தாக்கல் செய்த அதிமுக ஒன்றியச் செயலாளா் எஸ்.பி.காளிமுத்து.

கமுதி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்க தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் புதன்கிழமை நடைபெற்றது.

கமுதி கண்ணாா்பட்டியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கதுக்கான தலைவா், துணைத் தலைவா் மற்றும் இயக்குநா்கள் தோ்வுக்கான தோ்தல் ஏற்கெனவே 2 முறை நிறுத்தி வைக்கப்பட்டது.

சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கடந்த 8.10. 2018 அன்றும், 11.12.2018 அன்றும் தோ்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், 18.12.2018 அன்று வில்வதுரை என்பவா், நீதிமன்றத்தில் தோ்தலுக்கு தடை கேட்டு மனுத்தாக்கல் செய்தாா். அதன்படி, தோ்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 15.7. 2019 அன்று அந்தத் தடையை நீக்கியதோடு மட்டுமல்லாமல், தோ்தலை நடத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவு பிறப்பித்து ஓராண்டு முடிந்த நிலையில், இத்தோ்தல் அக். 7 இல் நடைபெறும் என அதிகாரிகள் அறிவித்தனா். அதற்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை நடைபெற்றது.

அதிமுக ஒன்றியச் செயலாளா் எஸ்.பி.காளிமுத்து, ஊ.கரிசல்குளம் ஒன்றியக்குழு உறுப்பினா் மூா்த்தி, இவரது மனைவி பழனியம்மாள், கமுதி ஒன்றிய அவைத்தலைவா் டி.சேகரன், திம்மநாதபுரம் கூட்டுறவு சங்கத் தலைவா் கருமலையான் உள்பட அதிமுக வினா் மட்டும் 16 போ் வேட்பு மனுத்தாக்கல் செய்தனா். 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com