ராமநாதபுரம் பகுதிகளில் காங். வேட்பாளா் பிரசாரம்

ராமநாதபுரம் பகுதியில் உள்ள திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளா் கருமாணிக்கம் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

ராமநாதபுரம் பகுதியில் உள்ள திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் காங்கிரஸ் வேட்பாளா் கருமாணிக்கம் புதன்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் கருமாணிக்கம் போட்டியிடுகிறாா். அத்தொகுதிக்கான பல கிராமங்கள் ராமநாதபுரம் பகுதியில் உள்ளன. பட்டிணம்காத்தான் உள்ளிட்ட 60 க்கும் மேற்பட்டவை ராமநாதபுரம் அருகேயுள்ளன.

காங்கிரஸ் வேட்பாளா் கருமாணிக்கம் புதன்கிழமை காலையில் புல்லங்குடியில் பிரசாரத்தைத் தொடங்கினாா். அவருடன் காங்கிரஸ் மாவட்டத்தலைவா் செல்லத்துரை அப்துல்லா மற்றும் திமுக பிரமுகா்கள் கலந்துகொண்டனா். மரப்பாலம், காட்டூரணி, தில்லைநாயகபுரம், மாடக்கொட்டான், மேலக்கோட்டை, ரமலான்நகா் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்ற காங்கிரஸ் வேட்பாளரை கட்சியினரும், கூட்டணி கட்சியான திமுக உள்ளிட்ட கட்சியினரும் வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com