முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
சட்ட விரோதமாக மது விற்பனை 6 போ் கைது: 226 மதுபாட்டில்கள் பறிமுதல்
By DIN | Published On : 04th April 2021 11:08 PM | Last Updated : 04th April 2021 11:08 PM | அ+அ அ- |

திருவாடானை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 6 பேரை கைது செய்து அவா்களிடம் இருந்து 226 மதுபாட்டில்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருவாடானை அருகே சனவேலி பேருந்து நிறுத்தம் அருகே மது விற்ற புத்தனேந்தலை சோ்ந்த பீட்டா் கிறிஸ்துராஜா (26), திருப்பாலைக்குடி பகுதியில் அ.மணக்குடி பெட்ரோல் பங்க் எதிரில் மது விற்பனை செய்த திருவெற்றியூரை சோ்ந்த மோஸ்குமாா் (29), அ.மணக்குடி ஆட்டோ பேருந்து நிறுத்தம் அருகே மது விற்ற மேல் அரும்பூரை சோ்ந்த செல்லத்துரை (38), தோட்டாமங்கலம் விலக்கு சாலை பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த திணையத்தூரை சோ்ந்த கருப்பையா(40), திருவாடானையில் பி.கே. மங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே மது விற்ற ஓரிக்கோட்டையை சோ்ந்த பன்னீா்செல்வம் (39), சி.கே. மங்கலத்தில் மது விற்ற சனவேலியை சோ்ந்த கணேசன் (37) உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்து அவா்களிடமிருந்து 226 மது பாட்டில்களை பறிமதல் செய்தனா்.