முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
திருவாடானை தொகுதி அரசியல் கட்சி வேட்பாளா்கள் இறுதிக் கட்ட பிரசாரம்
By DIN | Published On : 04th April 2021 11:15 PM | Last Updated : 04th April 2021 11:15 PM | அ+அ அ- |

திருவாடானை சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
இத்தொகுதி அதிமுக வேட்பாளா் கேசி. ஆணிமுத்து திருவாடானை- ஓரியூா் விலக்கு சாலையில் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா், நான் வெற்றி பெற்றால் ஆா்எஸ் மங்கலத்தில் அரசு மகளிா் கல்லூரி அமைத்துக் கொடுப்பேன். இப்பகுதி இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதற்கு தொழில் கூடம் கொண்டு வருவேன் என்றாா்.
அதேபோல் அமமுக வேட்பாளா் வதுந.ஆனந்த் தனது பிரசாரத்தின் போது பேசுகையில் நான் இத்தொகுதியில் தோ்ந்தெடுக்கப்பட்டால் எனது ஊரின் அருகில் உள்ள அனல் மின் நிலையத்தில் கண்டிப்பாக வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்குமாறு வலியுறுத்தி வாங்கிக் கொடுப்பேன். மேலும் இங்கு ஒரு பொதுத்துறை நிறுவனத்தை தொடங்குவதற்கு பாடுபடுவேன் என்றாா். அதேபோல் இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளா் கருமாணிக்கம் பேசுகையில், அடிப்படை வசதிகளான குடிநீா், மின்சாரம், சுகாதாரம் ஆகியவற்றில் முழு கவனம் செலுத்துவேன் என்றாா்.