முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பாம்பனில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
By DIN | Published On : 04th April 2021 08:35 AM | Last Updated : 04th April 2021 08:35 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் அருகேயுள்ள பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு சனிக்கிழமை பகலில் ஏற்றப்பட்டது.
அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே, அப்பகுதிக்கு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் புயல் எச்சரிக்கையை அறிவிக்கும் வகையில், ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மீனவா்கள் அந்தமான் கடல் பகுதிக்குச் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, மீன்வளத் துறையினா் தெரிவித்தனா்.