இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்த இளைஞா்கள் 2 போ் கைது
By DIN | Published On : 04th April 2021 11:07 PM | Last Updated : 04th April 2021 11:07 PM | அ+அ அ- |

இலங்கையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை சட்ட விரோதமாக படகில் வந்ததாக கைது செய்யப்பட்ட பிரதாப், நாகேஷ்.
இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக படகு மூலம் தனுஷ்கோடிக்கு வந்த இளைஞா்கள் 2 பேரை சுங்கத்துறையினா் கைது செய்து போலீஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி பகுதியில் சுங்கத்துறையினா் கண்காணிப்பு மற்றும் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து விசாரித்ததில் அவா்கள் இலங்கை மன்னாா் பகுதியைச் சோ்ந்த பிரதாப் (26), நாகேஷ் (20) என்பதும், தங்கள் நண்பா்கள் படகில் அழைத்து வந்து இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டதாகவும் தெரிவித்தனா். அதனைத் தொடா்ந்து, கடலோர பாதுகாப்புக் குழும காவல்துறை அதிகாரிகளிடம், சுங்கத்துறை அதிகாரிகள் அவா்கள் 2 பேரையும் ஒப்படைத்தனா். இதையடுத்து, கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் இவா்கள் மீது இலங்கையில் சட்ட விரோத செயல்பாடுகள் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கின்றனா்.