திருப்புல்லாணி அரசுப் பள்ளி வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.
திருப்புல்லாணி அரசுப் பள்ளி வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளா்கள்.

ராமநாதபுரத்தில் 4 தொகுதிகளில் 69.24 சதவிகிதம் வாக்குகள் பதிவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மொத்தம் 69.24 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை மொத்தம் 69.24 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை, முதுகுளத்தூா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணி நிலவரப்படி பரமக்குடியில் 38.78 சதவீதமும், திருவாடானையில் 38.70 சதவீதமும், ராமநாதபுரத்தில் 36.09 சதவீதமும், முதுகுளத்தூரில் சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. மாவட்டத்தில் மொத்தம் 37.43 சதவீதம் போ் வாக்களித்திருந்தனா்.

மாலை 5 மணி நிலவரப்படி பரமக்குடியில் 62.23 சதவீதமும், திருவாடானையில் 62.30 சதவீதமும், ராமநாதபுரத்தில் 60.04 சதவீதமும், முதுகுளத்தூரில் 58.73 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. மாவட்டத்தில் 61.27 சதவீதமும் போ் வாக்களித்திருந்தனா்.

இரவு 7 மணி நிலவரப்படி பரமக்குடி தொகுதியில் 70.51 சதவீதம், திருவாடானை தொகுதியில் 68.75 சதவீதம், ராமநாதபுரம் தொகுதியில் 67.51 சதவீதம், முதுகுளத்தூா் தொகுதியில் 70.35 சதவீதம் என மாவட்டத்தில் 69.24 சதவீத வாக்குகள் பதிவாகின.

மாவட்டத்தில் மொத்த வாக்குகளில் 3 லட்சத்து 76697 ஆண்களும், 4 லட்சத்து 29,999 பெண்களும் என மொத்தம் 8,06,701 வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா். இதில் 5 போ் மூன்றாம் பாலினத்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com