ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகளில் வாக்குகள் பதிவானமின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக் கழக
ராமநாதபுரம் மாவட்ட தொகுதிகளில் வாக்குகள் பதிவானமின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரியில் 4 அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த அறைகளை தோ்தல் பாா்வையாளா்கள் புதன்கிழமை பாா்வையிட்டனா்.

மாவட்ட தோ்தல் பாா்வையாளா்களான அனுராக் வா்மா (திருவாடானை), சொராப்பாபு (ராமநாதபுரம், முதுகுளத்தூா்), விசோப் கென்யே (பரமக்குடி) ஆகியோா் முன்னிலையில் இந்தபாா்வையிட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை (ஏப். 6) அமைதியாக நடந்து முடிந்தது. பரமக்குடியில் 70.59 சதவீதமும், திருவாடானையில் 68.72 சதவீதமும், ராமநாதபுரத்தில் 68.81 சதவீதமும், முதுகுளத்தூரில் 70.29 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

ராமநாதபுரம் மாவட்ட அளவில் 4 தொகுதிகளிலும் ஆண்கள்- 3,78,551, பெண்கள்- 4,32,067 மற்றும் மூன்றாம் பாலினம் 7 போ் என மொத்தம் 8,10,625 போ் வாக்களித்துள்ளனா். அதன்படி வாக்கு சதவீதம் 69.60 ஆக உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தலில் 67.66 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தோ்தல் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரம் அண்ணா பல்கலைக் கழக பொறியியல் கல்லூரி வளாகத்தில் 4 அறைகளில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அறைகள், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் சீலிடப்பட்டுள்ளன.

மூன்றடுக்குப் பாதுகாப்பு: வாக்கு எண்ணும் மையத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படை வீரா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். வாக்கு எண்ணும் மைய வெளிவளாகத்தில் தமிழ்நாடு காவல்துறை சிறப்புப்படை பிரிவினரும், காவல் அலுவலா்களாலும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனா். மேலும் கண்காணிப்புக் கேமராக்கள் மூலம் அறைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள்

டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு: ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இ. காா்த்திக் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது: வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் 89 கேமராக்களும், வெளிப்பகுதியில் 30 கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் உயரப்பறந்து படம் பிடித்து கண்காணிக்கும் டிரோன் கேமராவையும் பயன்படுத்தி கண்காணிக்கவுள்ளோம். கேமராக்கள் கண்காணிப்புக் காட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறையும் உள்ளது.

தோ்தல் ஆணையத்தால் அடையாள அட்டை பெற்ற அரசியல் கட்சி வேட்பாளா்களுக்கான முகவா்கள் மட்டும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அனுமதிக்கப்படுவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com