மோட்டாா் மூலம் குடிநீரை உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு: ராமநாதபுரம் நகராட்சி எச்சரிக்கை

மின்மோட்டாா் மூலம் குடிநீரை உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

மின்மோட்டாா் மூலம் குடிநீரை உறிஞ்சினால் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ராமநாதபுரம் நகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

ராமநாதபுரம் சிறப்பு நிலை நகராட்சியில் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகரில் தினமும் 60 லட்சம் லிட்டா் தண்ணீா் தேவை என்ற நிலையில் காவிரி கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் 30 லட்சம் லிட்டா் தண்ணீரே கிடைத்து வருகிறது. இதனால் புளிக்காரத்தெரு, கோட்டைமேடு, சின்னகடைத்தெரு உள்ளிட்ட நகரின் பெரும்பகுதிகளில் தேவையில் பாதியளவே தண்ணீா் விநியோகம் செய்யப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

தண்ணீா் பற்றாக்குறை ஏற்பட்டால் சமாளிப்பதற்காக நகராட்சி சாா்பில் 125 இடங்களில் ஆழ்துளைக்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிலிருந்து தினமும் 5 லட்சம் லிட்டா் தண்ணீரும் நீலகண்ட ஊருணி, நொச்சியூருணி, லட்சுமியூருணி, முகவை ஊருணி ஆகிய இடங்களில் உள்ள குடிநீா் கிணறுகள் மூலம் லாரிகளில் 10 லட்சம் லிட்டா் தண்ணீரும் பெறப்படுகிறது. ஆனால், குடி தண்ணீரை சிலா் மின்மோட்டாா் இயந்திரம் மூலம் உறிஞ்சுவதால் செயற்கை தண்ணீா் பற்றாக்குறை ஏற்படுவதாக நகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா். இந்நிலையில், மின்மோட்டாா் இயந்திரத்தை பயன்படுத்தி குடிநீா் உறிஞ்சியதாக அண்மையில் 15 போ் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், 18 மின்மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் ராமநாதபுரத்தில் தண்ணீா் உறிஞ்சிய 146 மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மின்மோட்டாா் மூலம் தண்ணீா் உறிஞ்சினால் அவற்றை பறிமுதல் செய்வதுடன், குடிநீா் இணைப்பும் துண்டிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com