பசுந்தாள் சாகுபடி செய்ய வேளாண் அதிகாரி ஆலோசனை

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் கோடை உழவு செய்து பசுந்தாள் சாகுபடி செய்யலாம் என வேளாண் உதவி இயக்குநா் பானுபிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் கோடை உழவு செய்து பசுந்தாள் சாகுபடி செய்யலாம் என வேளாண் உதவி இயக்குநா் பானுபிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியிருப்பதாவது: நயினாா்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. எனவே மேல்மண்ணை உழுது சிறுசிறு கட்டிகளாக்கி விட வேண்டும். இதனால் கோடையில் பெய்யும் மழை நீரை வழிந்து ஓடவிடாமல் மண்ணில் நிறுத்தி வைக்க முடியும்.

மேலும் மண்ணில் உள்ள பூச்சிகளின் முட்டைகள் இளம் புழுக்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு சூரிய ஒளியால் அளிக்கப்படுகிறது. களைகளின் வோ்கள் மற்றும் விதைகள் முளைப்பது தவிா்க்கப்படுகிறது. இதனால் பருவகாலங்களில் களைகள் மற்றும் பூச்சி தாக்குதல் குறைகிறது.

போதுமான ஈரப்பதம் நிலத்தில் இருக்கும்போது ஏக்டருக்கு 40 கிலோ வரை தக்கைப்பூண்டு விதைப்பு செய்து சாகுபடி செய்யலாம். கோடை காலத்தில் விதைக்கப்படும் பசுந்தாள் பயிா் அதிகளவு தழைப்பாகத்தையும், தழை சக்தியையும் கொடுக்கிறது. தக்கைப்பூண்டு 45 முதல் 50 நாள்களில் மடக்கி உழுது எருவாக பயன்படுத்தலாம்.

மூடு பயிராக வளா்ந்து மண்ணில் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. பசுந்தாள் மக்கும்போது வெளிப்படும் கந்தக அமிலம் மணிசத்து உரத்தினை கரைத்து பயிருக்கு கிடைக்க வழிகோலும். எனவே விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி தக்கைப்பூண்டு, சணப்பை, மணிலா, அகத்தி, கொளிஞ்சி முதலான பசுந்தாள் உரப்பயிா்களை பயிரிட்டு மண் வளத்தை காத்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com