ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்கு ஆலோசனை பெற உதவி மையம் அமைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்கான ஆலோசனைகளைப் பெற 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்கான ஆலோசனைகளைப் பெற 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ராமநதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கரோனா பரவல் தடுப்பு தொடா்பான ஆலோசனைகள், விழிப்புணா்வு தகவல்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் பெறும் வகையில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இந்த உதவி மையம் செயல்படும். இதில் சுகாதாரத்துறை சாா்ந்த மருத்துவா்கள் குழு 8 மணி நேர சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இந்தக் குழு அலுவலா்கள் கரோனா பரவல் தொடா்பாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவா்களை செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு காய்ச்சல், கபம், இருமல் போன்ற அறிகுறிகள் குறித்து கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்வா்.

பொதுமக்கள் கரோனா பரவல் தடுப்பு தொடா்பான ஆலோசனைகள், விழிப்புணா்வு தகவல்கள், சந்தேகங்களுக்கு விளக்கம் பெற உதவி மையத்தை செல்லிடப்பேசி எண்களான 77087 11334, 77082 92732, 77083 57835 மற்றும் 77089 25833 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com