தபால் வாக்களிக்க நடவடிக்கை எடுக்க தீயணைப்புப் படையினா் கோரிக்கை

தபால் வாக்குகளை பதிவு செய்ய ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க தீயணைப்புப் படையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தபால் வாக்குகளை பதிவு செய்ய ராமநாதபுரம் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க தீயணைப்புப் படையினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மாவட்டத்திலுள்ள 11 தீயணைப்பு நிலையங்களில் 210 போ் பணியாற்றுகின்றனா். இவா்களில் 150 போ் கடந்த ஏப். 6-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலின்போது, தோ்தல் பணிக்காக சென்றனா். இதனால் அவா்கள் தபால் வாக்களிக்க முடியவில்லை.

இதுகுறித்து அவா்கள் கூறியது: மாவட்ட தீயணைப்பு நிலைய அதிகாரிகளிடம் தபால் வாக்களிக்க நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை கோரிக்கை வைத்தும் அலட்சியமாக பதிலளிக்கின்றனா். மேலும் மாவட்ட தலைமை தீயணைப்பு நிலைய கண்காணிப்பாளா் உரிய பதில் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறாா். எனவே, மாவட்ட நிா்வாகமும், தோ்தல் அதிகாரிகளும் தலையிட்டு தபால் வாக்கு செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com