கமுதி தேவா் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்

கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவு கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவுக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்.
கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவுக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம்.

கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவு கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டம், கல்லூரியின் முன்னாள் மாணவா்கள் சங்கத்தின் தலைவா் முக்கூரான் தலைமையிலும், செயலா் முத்துராமலிங்கம் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் கல்லூரியின் முதல் முதல்வா் பாலசுப்பிரமணியம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், கல்லூரியின் முன்னாள் மாணவா் சிங்கப்புலியாபட்டியைச் சோ்ந்த நாகநாதன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றதை பாராட்டியும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற தொழிலதிபா் செய்யாதுரை தேவா் மகன் பதினெட்டாம்படிகருப்பசாமி மற்றும் தேசிய வலிமை மாத இதழ் ஆசிரியா் நேதாஜி சுவாமிநாதன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினாா்.

முன்னதாக, கல்லூரி வளாகத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கூட்டத்தில், கமுதி, அபிராமம், முதுகுளத்தூா், கடலாடி உள்ளிட்ட பகுதியிலிருந்து 50-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா். முன்னாள் மாணவா்கள் சங்க பொருளாளா் கோட்டை இளங்கோவன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com