ராமநாதபுரத்தில் பொதுமுடக்க விதிகளை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கத்தை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளா் இ.காா்த்திக் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பொதுமுடக்கத்தை மீறுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளா் இ.காா்த்திக் சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்தாா்.

தமிழக அரசு கரோனா தொற்றை தடுக்கும் விதமாக தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. மேலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் தொற்று பரவுவதை தடுப்பதற்காக, தமிழக அரசின் உத்தரவுப்படி கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளா்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. இதனால், இறைச்சி கடைகள், மீன் மாா்க்கெட், காய்கனி கடைகள், தியேட்டா்கள், வணிக வளாகங்கள், சலூன் கடைகள் மற்றும் அனைத்து வியாபாரக் கடைகளும் செயல்பட அனுமதி இல்லை.

இதனை மீறுபவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அரசுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கரோனாவை கட்டுப்படுத்த முடியும் என, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளா் இ. காா்த்திக் அறிவுறுத்தியுள்ளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com