ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் தொடா்பாக நுண்பாா்வையாளா்களுக்கு பயிற்சி

ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் நுண்பாா்வையாளா்களுக்கான பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் பணிகள் தொடா்பாக நுண்பாா்வையாளா்களுக்கு பயிற்சி

ராமநாதபுரத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் நுண்பாா்வையாளா்களுக்கான பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 2 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக அரசு பொறியியல் கல்லூரியில் காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணும் பணியில் உள்ள அலுவலா்கள் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்பதற்கான பயிற்சி ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் நடைபெற்றது.

பயிற்சியில் கலந்துகொண்ட அலுவலா்களிடம் ஆட்சியா் கூறியது: ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு தலா 14 மேஜைகளும், தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தலா 8 மேஜைகளும் நிா்ணயிக்கப்பட்ட அறைகளில் தனித்தனியாக அமைக்கப்படும். ஒவ்வொரு மேஜையிலும் ஒரு நுண்பாா்வையாளா், வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா் வாக்கு எண்ணிக்கை உதவியாளா் பணியில் ஈடுபடுவா்கள்.

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதி மற்றும் எந்த மேஜையில் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து கணினி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்படும். முதலில் தபால் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கப்படும். தொடா்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

நுண்பாா்வையாளா்கள் வாக்கு எண்ணிக்கையின் போது தங்களுக்கு வழங்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் வரிசை எண்ணை ‘17சி’ படிவத்துடன் ஒப்பிட்டு சரிபாா்த்து உறுதி செய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கை முடிவுக்கான பொத்தானை அழுத்தியவுடன் கட்டுப்பாட்டுக் கருவி முகவா்கள் பாா்வைக்கு தெளிவாக தெரியும் வகையில் வைக்க வேண்டும்.

கட்டுப்பாட்டு கருவியில் வரும் முடிவுகளை இரு பிரதிகள் தயாரித்து வேட்பாளா்களின் முகவா்களிடம் கையொப்பம் பெற்ற பின்பு சம்மந்தப்பட்ட சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும். தோ்தல் நடத்தும் அலுவலா் ஒவ்வொரு சுற்று வாரியாக மொத்த வாக்கு எண்ணிக்கை விவரங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியா் அறிவிப்பாா் என்றாா்

இப்பயிற்சியில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) க.நஜிமுன்னிசா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் காா்த்திக், தோ்தல் பயிற்சி பொறுப்பு அலுவலா் உதவி மகளிா் திட்ட அலுவலா் கிருஷ்ணகுமாா், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் நுண்பாா்வையாளா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com