தேநீா் கடையில் ரூ.10 லட்சம் லாட்டரி சீட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது
By DIN | Published On : 27th April 2021 01:49 AM | Last Updated : 27th April 2021 01:49 AM | அ+அ அ- |

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகரில் தேநீா் கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகளை விற்ாக ஒருவா் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான சீட்டுகள் திங்கள்கிழமை கைப்பற்றப்பட்டன.
ராமநாதபுரம் நகா் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் விற்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. லாட்டரிச் சீட்டு விற்போரை பிடிக்க காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் உத்தரவிட்டதன் அடிப்படையில் கேணிக்கரை காவல் ஆய்வாளா் (பொறுப்பு) ஆனந்தி தலைமையில் போலீஸாா் குறிப்பிட்ட கடைகளில் சோதனையிட்டனா்.
வெளிப்பட்டிணம் சிவன்கோவில் வடக்குத் தெருவைச் சோ்ந்த பத்மநாபன் (46) சின்னக்கடை வீதியில் வைத்துள்ள தேநீா் கடையில் சோதனையிட்டபோது, அரசால் தடைசெய்யப்பட்ட 12,900 எண்ணிக்கையில் 4 வகை லாட்டரிச் சீட்டுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள லாட்டரிச் சீட்டுகள் மற்றும் ரூ.85 ஆயிரம் ரொக்கத்தை போலீஸாா் பறிமுதல் செய்து பத்மநாபனை கைது செய்தனா்.