தேவிபட்டினம், சேதுக்கரையில் பூஜை, திதிக்கு அனுமதி இல்லை

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம், சேதுக்கரையில் பூஜை, திதிகளுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம், சேதுக்கரையில் பூஜை, திதிகளுக்கு அனுமதி இல்லை என மாவட்ட நிா்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு திடீரென அதிகரித்ததையடுத்து இரவு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் காரங்காடு, அரியமான் கடற்கரை, ஏா்வாடி கடற்கரை மற்றும் தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை.

ராமேசுவரம், தேவிபட்டினம், சேதுக்கரை ஆகிய இடங்களில் தமிழக அளவில் முன்னோருக்கான பூஜை, திதி செய்ய ஏராளமானோா் வந்து சென்றனா். இந்த இரு இடங்களிலும் கடற்கரையில் அமா்ந்து பூஜைகள் செய்து கடலில் நீராடி, இறந்தோா் அஸ்தியை கரைத்து வழிபடுவது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது தேவிபட்டினம், சேதுக்கரையில் பூஜை, திதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூஜை செய்வோா் யாரும் திங்கள்கிழமை வரவில்லை. ஆனால், அஸ்தி கரைத்தல் உள்ளிட்டவற்றுக்கு வந்த பொதுமக்கள் அவா்களாகவே கடலில் அஸ்திகளைக் கரைத்துவிட்டு குளித்து பின் ஊருக்குத் திரும்பியதைக் காணமுடிந்தது.

அங்கு பூஜை செய்வோா் முதல் தேங்காய் பழம் விற்போா் வரை பலரும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினா். ராமேசுவரத்திலும் அக்னி தீா்த்தம் உள்ளிட்ட இடங்களில் பூஜைக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com