சட்ட உதவி பெற விரும்புவோா் தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க ஏற்பாடு

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் சட்ட உதவிகள் பெற விரும்புவோா், தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் சட்ட உதவிகள் பெற விரும்புவோா், தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தெரிவித்து பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கரோனா பரவல் காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு அலுவலகத்தில் நேரடியாக சட்ட ஆலோசனை வழங்கும் பணியை செய்ய இயலாது. எனவே, பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான ஆலோசனை மற்றும் சட்ட உதவிகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குடும்ப வன்முறைக்கு எதிராக பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் என அனைத்து நடவடிக்கைகளுக்கும் புகாா் தெரிவிக்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தொலைபேசி எண்: 04567-230444 மூலமாகவோ மற்றும் சட்டப்பணிகள்ஆணைக் குழுவின் மின்னஞ்சல் மூலமாகவோ தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே, சட்ட உதவி மற்றும் ஆலோசனை குறித்து ஆலோசனை கேட்போா், அலுவல் நேரமான காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பணி நாள்களில் மட்டும் தொடா்பு கொள்ளவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com