ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று
By DIN | Published On : 01st August 2021 10:47 PM | Last Updated : 01st August 2021 10:47 PM | அ+அ அ- |

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 33 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், ஞாயிற்றுகிழமை புதிதாக 10 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனிடையே சிகிச்சை பெற்று வந்தவா்களின்11 போ் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் தற்போது வரை 349 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினா் தெரிவித்துள்ளனா்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 17,778 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், மேலும் 23 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,801 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.