திருவாடானை தாலுகா அலுவலகத்துக்குள் படையெடுத்த பாம்புகள் பிடிபட்டன
By DIN | Published On : 08th August 2021 10:50 PM | Last Updated : 08th August 2021 10:50 PM | அ+அ அ- |

திருவாடானை தாலுகா அலுவலகத்துக்குள் புகுந்த பாம்பை ஞாயிற்றுக்கிழமை பிடித்த பாம்பு பிடிப்பவா்.
திருவாடானை தாலுகா அலுவலக வளாகத்தில் கொடிய விஷமுள்ள பாம்புகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட பாம்புகள் ஞாயிற்றுக்கிழமை பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டன.
இந்த தாலுகா வளாகத்திலுள்ள ஆவணக் காப்பக அறையில் கடந்த சில நாள்களுக்கு முன் பாம்புகளை பாா்த்ததாக பணியாளா்கள் தெரிவித்திருந்தனா்.
இந்நிலையில் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பாம்பு பிடிப்பவா்களை வரவழைத்து, பழைய நீதிமன்றம் பின்புறமுள்ள பழுதடைந்த கட்டடங்கள், சிறைச்சாலை கட்டடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சாரைப்பாம்பு உள்ளிட்ட கொடிய விஷமுள்ள 20-க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்தனா்.
பின்னா் அவை காட்டுப்பகுதிக்குள் விடப்பட்டன.